பதிவு செய்த நாள்
20
ஜன
2018
02:01
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், வன்மீகநாத சுவாமி கோவில் கும்பாபிஷே கம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், தாத்திமேட்டில், வயல்வெளியில், வன்மீகநாத சுவாமி சிலை, திறந்தவெளியில் இருந்தது. இதனால், கோவில் கட்ட, தனியார் டிரஸ்ட் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, விமானத்துடன் கூடிய, (தூங்கானைமாடம்) கோவில் நிர்மாணம் செய்யப்பட்டது.
விநாயகர், பாலமுருகர், சண்டிகேஸ்வரர், நந்தி, பலிபீடம் சன்னிதிகள் அமைத்து, சுதை வேலைகள் என, பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி, 17ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங் கியது. நேற்று முன்தினம், நூதன விக்ரஹங்களுக்கு கண் திறத்தலும், கும்பாபிஷேக தினமா ன, நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது.
காலை, 9:15 மணிக்கு, கோபுரம் கும்பாபிஷேமும், தொடர்ந்து, விநாயகர், பால முருகர்,வன்மீக நாதர் மஹா கும்பாபிஷேகமும் நடைந்தன.