Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோவில் ... சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தீர்த்தக்குட ஊர்வலம் சக்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயில் வாகனத்தில் வருவான் பாலமுருகன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயில் வாகனத்தில் வருவான் பாலமுருகன்

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
12:01

ஆர்.கே.பேட்டை: பொங்கலுக்கு அடுத்த, எட்டாம் நாள், முதல் பூஜையாக, மயில் வாகனன் பாலமுருகனுக்கு விழா எடுத்து கொண்டாடுவது பெண்களின் வழக்கம். அதன் படி, நேற்று காலை, உப்பு, மணலில் கலக்கப்பட்ட வண்ணக்கோலத்திலும், மாலையில், சுத்தமான அரிசி மாவிலும் வீட்டு வாசலில் கோலமிட்டு, பாலமுருகனை பெண்கள் வரவேற்றனர். ஆண்டின் துவக்கம் மட்டும் இன்றி, தொழிலுக்கு பூஜை போட்டு ஆரம்பிப்பதற்கு முன்பாக, மயில் வாகனத்தில் வரும் பாலமுருகனை வரவேற்கும் விதமாக, நேற்று, மயிலேரி என, அழைக்கப்படும் பூஜை நடத்தப்பட்டது.

மாலையில், வானில் நட்சத்திரம் தோன்றியதும், மயில் வாகனத்தில், பாலமுருகன் வருவதாகவும், அவரை வீட்டிற்குள் வரவேற்கும் விதமாக, வீட்டு வாசல் மற்றும் முற்றத்தில், அரிசி மாவில் கோலம் இட்டு, அலங்கரித்திருந்தனர். வீட்டிற்குள் பாலமுருகன் அடியெடுத்து நடந்து வந்ததற்கான தடயமாக, குழந்தைகளின் பாத சுவடை, அரிசி மாவில் பதித்தனர். வாசல் முதல், பூஜை அறை வரை, இந்த சுவடு, உள்நோக்கி மட்டுமே பதிக்கப்படும். வீட்டிற்குள் வந்த பாலமுருகன், அங்கேயே நிரந்தரமாக தங்கியிருப்பதாக கருதுவதால், திரும்பி செல்லும் பாத சுவடு இருக்காது. பாலமுருகனுக்கு ஒன்பது வகை காய்கறிகளுடன் படையல் வைக்கப்பட்டது. மயில் வாகனத்தில் வரும் பாலமுருகனை நினைத்து, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நேற்று காலை, வீட்டு வாசல்களில், வண்ண வண்ண பொடிகளால், மயில் கோலத்தால், பெண்கள் அலங்கரித்து இருந்தனர். பெருமாளை இஷ்ட தெய்வமாக வணங்குபவர்கள், பாலகிருஷ்ணனை எண்ணி, நேற்றைய பூஜையை நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar