திண்டுக்கல்: திண்டுக்கல் வித்யா பார்த்தி மேல்நிலை பள்ளியில் ஆஞ்சநேயர் சாலிசா பாராயண ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. ஹனுமன் சாலிசா பாராயணம் மற்றும் ேஹாமம், சிறப்பு பூஜைகள், ராம கதா மற்றும் சொற்பொழிவு நடந்தது. சுவாமி பைய்யாஜி, சாலிசா பாராயண மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார். குருஜி அருண் குமார்ஜி கலந்து கொண்டார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வித்யா பார்த்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, கணேசன், தேவி கியாஸ் ஏஜன்சி வேலுசாமி, செந்துார் கிரஷர்ஸ் அன்பரசு, வேலு கிரஷர்ஸ் மணிக்கண்ணன் ஆகியோர் செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்றும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நிகழ்வு நடக்கிறது.