பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
மோகனூர்: மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு முறையும் சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நவக்கிரஹங்களில் தர்மநெறி தவறாதவரும், நீதியை நிலைநாட்டுபவராகவும், ஈஸ்வரன் பட்டம் பெற்றவருமான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இடப்பெயர்ந்து அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்களை பெற்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
காலை சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்வதை தொடர்ந்து அதிகாலைட் 4.30 மணிக்கு மகா கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம் நடந்தது. அதையடுத்து காலை 7.24 மணிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார். தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. விழாவில், மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். அதேபோல் மோகனூர் காவிரி ஆற்றின் கரையோர் பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மதுகரவேணி அம்பாள் சமேதராக ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7.24 மணிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.