மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் வாழ்ந்த மகான் சாயிபாபா. 1858 முதல் 1918 வரை 60 ஆண்டுகள் பாபா ஷீரடியில் வசித்தார். இவர் தங்கிய பாழடைந்த மசூதி “துவாரகாமாயி” என அழைக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பல பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள “துனி” என்னும் நெருப்பு குண்டத்தில் கிடைக்கும் சாம்பல் “உதி” என்னும் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பாபாவின் அவதார தினமாக கருதப்படும் ராம நவமியும், சமாதி அடைந்த தினமான விஜயதசமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நல்வழி காட்டிய குருநாதரான இவருக்கு குரு பூர்ணிமா விழா மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. குரு வாரமான வியாழனன்று இவரைவழிபடுவோரு க்கு கேட்ட வரம் கிடைக்கும்.