பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
பொங்கலுர் :அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, இன்றிரவு கிராம சாந்தி பூஜை நடக்கிறது. நாளை காலை கொடியேற்றம், தொடர்ந்து, 30 ம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. வரும், 30ம் தேதி மாலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 31ல் காலை, 6:00 மணிக்கு சுவாமி தேரேற்றம்; 9:00 மணிக்கு தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 1ம் தேதி காலை, சுவாமி திருவீதியுலா; மாலையில், பரிவேட்டை; 2ம் தேதி காலை, சுவாமி திருவீதியுலா; மாலையில், மண்டப கட்டளை; 3ம் தேதி காலை தரிசனம், மதியம் அன்னதானம், மாலையில் மஞ்சள் நீராடல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் சின்னு, ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் மற்றும் தேர்த்திருவிழாக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.