கன்னிவாடி: தை வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு, கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிேஷகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் அகவல் பாராயணம், விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், கசவனம்பட்டி விநாயகர், மவுனகுரு சுவாமி கோயிலில், சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.