இந்து திரிவேணி சங்கமம் 5 ஆயிரம் பூஜாரிகள் பங்கேற்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2018 04:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கிராம கோயில் பூஜாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்து திரிவேணி சங்கமம் நிகழச்சியில் 5 ஆயிரம் பூஜாரிகள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் கிராமக்கோயில் பூஜாரிகள் ஆலோசனைக்கூட்டம் வழி விடு முருகன் கோயிலில் நடந்தது. மண்டல அமைப்பாளர் மு.மு.கோதாவரி பூஜாரி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ஆர்.வி.அன்புமாறன் முன்னிலை வகித்தார். விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் ப.காமாட்சி, மாவட்ட இணை அமைப்பாளர்கள் பொன்னுச்சாமி,குமாரவேலு, முனியசாமி, நாகராஜ், நயினார்கோவில் ஒன்றிய அமைப்பாளர் முனியாண்டி, கமுதி ஒன்றிய அமைப்பாளர் பாண்டி,திருப்புல்லாணி ஒன்றிய அமைப்பாளர் பாக்கியம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் நாகர்கோவிலில் ஜன., 26 முதல் 28 வரை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடக்கும் இந்து திரிவேணி சங்கமம், இந்து இளைஞர் எழுச்சி மாநாடு. ஆகிய நிகழ்ச்சிகளில் 5 ஆயிரம் கிராமக்கோயில் பூஜாரிகள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.