மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லுாரில் அய்யனார் சுவாமிக்கு வழிபாடு பூஜை நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுாரில், அய்யனார் சுவாமிக்கு, அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று, குலதெய்வ வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், குடும்பம், குடும்பமாக வழிபாடு செய்தனர். சுவாமிக்கு பால், தயிர், மலர், கனி மற்றும் வாசனை திரவியங்களால் பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.