பரமக்குடி, பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளிஅருகில் உள்ள குமரசுப்ரமண்ய சுவாமி கோயிலில் வருஷாபிேஷக விழா நடந்தது.கடந்த ஆண்டு இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.நேற்று காலை 9:00 மணி முதல் அனுக்கை,கணபதி, வருண பூஜை, கும்பஸ்தானம், ஹோமங்கள் நிறைவடைந்து, காலை 11:00 மணிக்குமகாபூர்ணாகுதி நடந்தது.தொடர்ந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, சுப்ரமண்ய சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கலச அபிேஷகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.