மதுரை, மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பம் அனைத்து சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் கூடலழகர் தெப்பக்குளத்தை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. உயர்நீதிமன்றம் கிளை உத்தரவின்படி தெப்பகுளத்தை சுற்றியுள்ள 108 கடைக்காரர்கள் ஒன்று சேர்ந்து குளத்தில் இருந்த முட்செடிகள், குப்பை, கழிவுநீரை அகற்றினர். இப்பணியை முன்னிட்டு அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. சங்கத் தலைவர் சுந்தர்பாபு, பாதுகாப்பாளர் சங்கரன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் ரமேஷ், நிர்வாக குழு உறுப்பினர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.