பதிவு செய்த நாள்
25
ஜன
2018
12:01
ப.வேலூர்: பாண்டமங்கலம், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் திருத்தேர் பெருவிழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலம் வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 16 காலை துவங்கியது. 21 வரை, அன்னம், சிம்மம், அனுமந்தம், சேஷ மற்றும் யானை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு மேல், சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று, வராஹபுஷ்கரணியில் தீர்த்தவாரி சக்கராஸ்நானம், நாளை, வசந்த உற்சவம், 27ல் புஷ்ப யாகம், 28ல் கருட உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர், தக்கார், விழாக்குழுவினர் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர். டி.எஸ்.பி., சுஜாதா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.