வடமதுரை, அய்யலுார் கருவார்பட்டி ராதா கோவிந்தா கோயிலில் ஜெகன்நாதர் தேர் திருவிழா நடந்தது. முன்னதாக காலையில் இருந்து ஹரிநாம சங்கீர்த்தனை, பகவத் கீதை வகுப்பு, மகாமந்திர ஜெபம், தீப ஆர்த்தி உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. மாலையில் ராதா கோவிந்தா கோயிலில் துவங்கி கருவார்பட்டி, அய்யலுார் கடைவீதி வழியே களர்பட்டி சீத்தாராமர் கோயில் வரை தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ’ என கோஷமிட்டவாறு தேரை இழுத்து வந்தனர். அய்யலுார் களர்பட்டியில் ஜெகநாதர் லீலை உபன்யாசம், பரதநாட்டியம், குழந்தைகளின் பகவத் கீதை சுலோக பாராயணம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.