மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் கடந்த 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவயோகி திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகளின் மகரத் தலை நாள் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் தை அசுவதி நட்சத்திரத்தன்று நடைபெறும். இவ்வாண்டு குருபூஜை விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குருபூஜை விழாவில் தொடர்ந்து 10 நாட்களும் தினமும் காலை, மாலை குருமுதல்வர் நமசிவாயமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும். மாலை சமயவிரிவுரை மற்றும் சமயசான்றோ ர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இவ்வாண்டு 24 பேருக்கு விருதுகளும், ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 9 ஆயிரம் மாணாக்கர்களுக்கு ஆதீன ம் 24வது குருமகாசன்னிதானம் சான்றிதழ்கள் வழங்கி ஆசி வழங்கினார். நேற்று 24ம் தேதி குருபூஜை நிறைவில் குருமுதல்வர் நமசிவாயமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின் னர் திருவண்ணாமலை கீர்த்திவாசன் சிவாச்சாரியார், நாச்சியார்கோவில் ரவிச்சந்திரன், புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றம், கும்பகோணம் டாக்டர் செல்வராஜ் ஆகியோருக்கு சிற ப்பு விருது மற்றும் பொற்கிழியை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார். இவ்விழாவில் சூரியனார்கோயில் ஆதீனம் சங்கரலிங்கதேசிக சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச சத்தியஞானதேசிக சுவாமிகள், சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக சுவாமிகள் உள்ளிட்ட குருமகா சன்னிதானங்க ள். திருப்பனந்தாள் காசிதிருமடம் இளவரசு ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ மத் கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் தம் பிரான் சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு பட்டணப்பிரவேசத்தை தொடர்ந்து இன்று 25ம் தேதி அதிகாலை சிவஞானக் கொலுக்காட்சி நடக்கிறது.