பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
ஈரோடு: அஸ்வமேத ராஜசூய யாக நிகழ்ச்சியில், 108 சுமங்கலி பூஜை நடந்தது. உலகின் மிகப் பெரிய, பழமையான விவசாய நாடு பாரத நாடு. மண்ணும், காற்றும் தூய்மையாக இருந்தவரை, நாட்டில் மழைக்கு குறைவில்லை. முன்னோர் நமக்கு கற்றுத்தந்த பாரம்பரிய, கலாசார வழிபாடு, சூரிய வழிபாடு, நதிகள் வழிபாடு, சுமங்கலி வழிபாடு ஆகியவற்றை நினைவூட்டும் முயற்சியாக, தமிழக பா.ஜ.,, விவசாய அணி சார்பில், ஈரோட்டில் ஏ.ஈ.டி., பள்ளியில், மூன்று நாள் அஸ்வமேத ராஜ சூய யாகம் நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று, திருவிளக்கு ஏற்றுதல், விக்னேஸ்வர பூஜை, பகவத் கீதா பாராயணம், லட்சமி மஹாயாகம், பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை நடந்தது. மாலையில், 108 சுமங்கலி பூஜை நடந்தது. இன்று, மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில், வேலூர் பொற்கோவில், ஸ்ரீபுரம் சக்தி அம்மா கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார். நாளை, 108 கோ பூஜை நடக்கிறது. இதில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கலந்து கொள்கிறார்.