பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
உடுமலை:உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி, ஜன.,31ம்தேதி நடை அடைக்கப்படுகிறது.சந்திர கிரகணம் ஜன., 31ம் தேதி நடக்கிறது. இதனால், கோவில்களில் அன்றைய தினத்தில் நடக்கும் பூஜைகள் தவிர்க்கப்பட்டுள்ளது. திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி ஜன.,31ம்தேதி, மாலை, 3:30 மணி முதல், நடை அடைக்கப்படுகிறது. மறுநாள் காலை, 6:00 மணிக்கு மீண்டும் வழக்கமான பூஜைகள் துவங்கும்.