பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
பல்லடம் : பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பல்லடம் அருகே "கந்தன் கருணை எனும் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. தைப்பூச திருவிழா, 31ல் கொண்டாடப்படுகிறது. அதில், பங்கேற்க திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங் கள், தன்னார்வலர்கள் தண்ணீர், ரிப்ளக்டர், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், பல்லடம் அருகே புத்தரச்சலில் "கந்தன் கருணை எனும் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில், உணவு, ஓய்விடம் உள்ளிட்ட பல சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.