விழுப்புரம்: விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை யொட்டி, விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நேற்று காலை 10.00 மணிக்கு 63 நாயன்மார்களின் திருவுருவ சிலைகளுக்கு, பால், தயிர், தேன், இளநீர் , விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 10.30 மணிக்கு நாயன்மார்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின், மாலை 5.00 மணிக்கு தேவாரம் திருவாசகம் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.