பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
நங்கவள்ளி: சிவ, வைணவ கூட்டு வழிபாட்டுக்கு பெயர்பெற்ற, நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபி?ஷக விழா, கடைசியாக கடந்த, 1989ல் நடந்தது. 27 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், கோவில் கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் சிதிலமடைந்து பராமரிப்பின்றி உள்ளது. சீரமைப்பு பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம், செயல் அலுவலர் ராஜா தலைமையில், கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., நங்கவள்ளி ஒன்றிய செயலாளர், எமரால்டு வெங்கடாஜலம் தலைமையில், கும்பாபிஷேக விழாக்குழு அமைக்கப்பட்டது.