சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்களை காப்பதற்காக, முருகன் படை வீரர்களுடன் புறப்பட்டார். சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை நோக்கி வரும் வழியில், விந்தியமலை பகுதியில், சூரபத்மனின் தம்பியான தாரகாசுரன் குறுக்கிட்டான். போர் மூண்டது. வெற்றி பெற்ற முருகன், தாரகாசுரனை கொல்ல மனமில்லாமல், அவனை யானையாக மாற்றினார். அந்த யானையை, தன் தம்பியான ஹரிஹரபுத்திரன் என்னும் சாஸ்தாவுக்கு அன்பு பரிசாக கொடுத்தார். அதையே, அய்யப்பன் வாகனமாக ஏற்றார்.