பதிவு செய்த நாள்
31
ஜன
2018
03:01
மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழா, இன்று துவங்குகிறது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச விழா, இன்று நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அதிகாலை, 3:30 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜையுடன், தைப்பூச ஜோதி விழாவும் துவங்குகிறது. பங்காரு அடிகளார் தலைமை வகிக்கிறார்.கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் நீதிபதிகள், உயர் அதிகாரிகள், பல நாடுகளைச் சேர்ந்த, ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதன் ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்கின்றனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.