பதிவு செய்த நாள்
31
ஜன
2018
03:01
திருத்தணி முருகன் கோவிலில், இன்று, தைப்பூச திருவிழாவையொட்டி, உற்சவர் முருகப்பெருமான், குதிரை வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார்.திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற வற்றால் அபிஷேகம் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, உற்சவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.தமிழகம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து வழிபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.