திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதேபோல், வடவீதி சுப்பிரமணியர் கோவில், சோமாசிபாடி சுப்பிரமணியர் கோவில், வில்வாரணி முருகர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள ஆறுமுக சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.