இளையான்குடி:இளையான்குடி அருகே உள்ள தோக்கனேந்தல், பாலதண்டாயுதபாணி கோயிலில், தைப்பூச திருவிழா நடைபெற்றது. சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். சாத்தனி விநாயகர் கோயிலில் நீராடி பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தோக்கனேந்தல் வரை ஊர்வலமாக வந்தனர். கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.