பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
குன்னுார் : குன்னுார் வி.பி., தெரு பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய கோவிலில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குன்னுார் வி.பி., தெரு பகுதியில், அமைந்துள்ள சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடந்தன. பகல், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, தொடர்ந்து சிவசுப்ரமணியர் திருத்தேர் வீதி உலா புறப்பட்டு நடந்தது. பாலசுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சர்வ சாதகங்களை கோவில் அர்ச்சகர் மகேஷ் குருக்கள் தலைமையில், மேற்கொள்ளப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவி கருமாரியம்மன் பாரம் ஏற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர். சந்திரகிரகணத்தையொட்டி நேற்று மாலை 3:00 மணிக்கு நடையடைக்கப்பட்டது. இதேபோல, குன்னுார் ஸ்டேன்லி பார்க் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமககள் செய்திருந்தனர்.