பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
குளித்தலை: குளித்தலை கடம்பர்கோவில் தைப்பூசம் திருவிழாவில், எட்டு கோவில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி கோலாகலமாக நடந்தது. தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, எட்டு கோவில் சுவாமிகள் சந்திப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. இத்திருவிழாவில், கலெக்டர் கோவிந்தராஜ், மாவட்ட நீதிபதி நம்பிராஜ், எஸ்.பி., ராஜசேகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் சூரியநாராயணன், கோவில் இ.ஓ.,க்கள், பணியாளர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இத்திருவிழாவில், கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.