பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
கோத்தகிரி : கோத்தகிரி நெடுகுளா கிராமத்தில், ஜெடையசுவாமி கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. அதிகாலை, 6:00 மணிமுதல் ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, விரதம் மேற்கொண்ட, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பஜனை, ஆடல் பாடல், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவை ஒட்டி, கிராம மக்களுக்கு கோவில் சன்னிதானத்தில் கப்பிடுதல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி நடத்துவதன் மூலம், ஆண்டு முழுவதும், கிராம மக்களுக்கு நோய் தாக்காமல் இருக்கும் என்பது, ஐதீகமாக உள்ளது. விழா ஏற்பாடுகளை, நெடுகுளா கிராம மக்கள் செய்திருந்தனர்.