பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
செஞ்சி : தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவில் நுழைவு வாயிலில், வேல் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா, தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நுழைவு வாயில், வேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 28 ம் தேதி காலை 7:00 மணிக்கு திருமஞ்சனம் தருவித்தல், மாலை 6:00 மணிக்கு அனுக்ஜை, தனபூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்த்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும், 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில்தர்மகர்த்தா லெனின், உபயதாரர் சவுந்தரராஜன், குருக்கள் அருட்பெரும்ஜோதி மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கம் வேத ஆகம வித்யாலயம் வரதராஜ குருக்கள் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர்.