பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
கொடுமுடி: கொடுமுடியில், ஆதியோகி சிவன் ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில், கடந்த ஆண்டு பிப்., 24 மகா சிவராத்திரியன்று, ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆதியோகி சிவன் ரதம், பல மாவட்டங்கள் வழியாக ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நேற்றுக் காலை, சாலைப்புதூரில் தொடங்கி, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சிவன் ரதம் வந்தது. ஈஷா யோகா மைய நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர். நேற்று முழுவதும் ஒத்தக்கடை, தாமரைப் பாளையம், அம்மன்கோவில், சிவகிரி, தாண்டாம் பாளையம், கந்தசாமி பாளையம் உள்பட பல பகுதிகள் வழியே, சிவன் ரதம் வலம் வந்து, பின்னர், வெள்ளகோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.