நடுவீரப்பட்டு:சிவசக்தி சாய்பாபா கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள நடுவீரப்பட்டு ஊராட்சி, ராம்ஜி நகரில், சிவசக்தி சாய்பாபா கோவில், புதிதாக கட்டப்பட்டது. எங்கும் இல்லாத வகையில், கருங்கற்களால் சிவசக்தி சாய்பாபா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுக்கு பின், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.