காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே, கிருஷ்ணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் கம்மாளத்தெருவில் புதிய ரயில் நிலையம் அருகில் உள்ள கிருஷ்ணேஸ்வரர் கோவில் சீரமைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் கணபதி பூஜை துவங்கியது. தொடர்ந்து அனைத்து பூஜைகளும் நிறைவு பெற்று, நேற்று காலை, 9:45 மணிக்கு மூலவர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.காலை, 10:30 மணிக்கு கிருஷ்ணேஸ்வரர் மூலருக்கு புனித அபிஷேகம் நடைபெற்றது. பகல், 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து, சுவாமியை வழிபட்டனர்.