பதிவு செய்த நாள்
09
பிப்
2018
02:02
ஊத்துக்கோட்டை:சுயம்பு காரனேஸ்வரர் கோவிலில், 13ம் தேதி, மகா சிவராத்திரி விழாவையொட்டி, ஆறு கால பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டை அடுத்த, காரணி கிராமத்தில் உள்ளது, சுயம்பு காரனேஸ்வரர் கோவில். சுயம்புவாக உருவான சிவலிங்கத்தை கண்ட கிராம மக்கள், அதை பூஜித்து வந்தனர். பின், பக்தர்கள் பங்களிப்புடன், கோவில் கட்டி பூஜைகள் நடத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக, இக்கோவிலில் பிரதோஷ விழா, சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
வரும், 13ம் தேதி, மூன்றாம் ஆண்டு சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 13ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, உற்சவர் சந்தன அலங்காரம், பகல், 12:00 மணிக்கு, வெற்றிலை அலங்காரம், மாலை, 3:00 மணிக்கு விபூதி அலங்காரம், இரவு, 9:00 மணிக்கு நவக்கிரக அலங்காரம், நள்ளிரவு, 12:00 மணிக்கு, மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மறுநாள், 14ம் தேதி, விடியற்காலை, 4:00 மணிக்கு, சிறப்பு வென்னீர் அபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி, கோலாட்டம், நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவையொட்டி, கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.