கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.15 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2018 02:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப்.15ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவங்குகிறது.வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா பிப்.15 ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவங்குகிறது. பிப்.16 ம் தேதி காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழா, 18 ம் தேதி சாட்டுதல், 20 ம் தேதி மதியம் 12:00 மணிக்கு கொடியேற்றம், 23 ம் தேதி அம்பாள் நாகல் நகர் புறப்பாடு நடக்கிறது.
மார்ச் 2 ம் தேதி காலை 6:00 மணிக்கு பூக்குழி, இரவு 8:00 மணிக்கு திருத்தேர் வீதியுலா, 3 ம் தேதி தசாவதாரம், 4 ம் தேதி காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம், 5 ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் மற்றும் 6 ம் தேதி மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.