Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.30 ... மீனாட்சி அம்மன் கோயிலில் துறவியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பாதுகாப்புக்கு ஆய்வு குழு : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
01:02

சென்னை: கோவில்கள் பாதுகாப்புக்கு என, அறநிலையத்துறை சார்பில், ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது, என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.கோவில்களில், தீ தடுப்பு நடவடிக்கை, கட்டட உறுதித்தன்மை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர், ராமச்சந்திரன் பேசுகையில், கோவில்களை பழமை மாறாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கட்டட உறுதித்தன்மை, மின் இணைப்புகளின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்ய, குழு ஏற்படுத்தப்படும். கோவில் வளாகத்திலும், சுற்றுப்புறத்திலும், பாதுகாப்பிற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை, மூன்று மாதத்திற்குள் அகற்ற வேண்டும், என்றார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:கோவில்களில், ஆகம விதிகளின் படியும், அந்தந்த கோவில் பஞ்சாங்க வழிகாட்டுதல் படியும், திருவிழாக்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு பின், கோவில்களின் பாதுகாப்புக்காக, ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இனி, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவில் சொத்துகள், சிலைகள் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளில், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட, 2,653 ஏக்கர் நிலம், மனைகள், கட்டடங்கள் என, 3,354 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.சிலைகள் பாதுகாப்பு குறித்து, சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. சிலை பாதுகாப்பு மையங்களில், எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.அறநிலையத்துறை ஆணையர், ஜெயா, கூடுதல் ஆணையர்கள், கவிதா, திருமகள், சுதர்சன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar