பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை துறவியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கோயில் நிர்வாகத்திற்கும், பக்தர்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்த அன்னை மீனாட்சி பக்தர் பேரவை அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இக்கோயிலில் தீவிபத்தால் சேதம் அடைந்த பகுதிகளை நேற்று தமிழக இந்து துறவியர் பேரவையின் மதுரை மண்டல துறவியர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் சின்மயா மிஷன் சிவயோகானந்தா, தத்துவானந்தா ஆசிரமம் சமானந்தா, குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்தா, சங்கரன்கோவில் ராகவானந்தா, திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி நியமானந்தா, அத்யாமானந்தா, திண்டுக்கல் விவேகானந்தா சேவாஸ்ரமம் மகேஷ்வரானந்தா, மதுரை ராமகிருஷ்ண மடம் நாராயணந்தா, கருமாத்துார் விவேகானந்தா சேவாஸ்ரமம் ஸதாசிவானந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.தீ விபத்திற்கு பின் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோயில் கடைகளை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தினர். கோயில் நிர்வாகங்களில் துறவியரையும், இந்துமத தலைவர்களையும் இணைக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், அன்னை மீனாட்சி பக்தர் பேரவை அமைப்பை உருவாக்கி கோயில் நிர்வாகத்திற்கும், பக்தர்களுக்கும் நல்லுறவை வளர்க்க முடிவு செய்தனர்.
தீயே உனக்கொரு கேள்வி: வீரா... வசந்தராயா!இப்படி ஆகுமென்று நினைத்தாகட்டினாய் அழகு மண்டபத்தை!தீயே,வீரன் வசந்தனின் கலை அழகைகொலை செய்ய ஏன் துணிந்தாய்?ஆள் அரவமில்லா வேளையில்உன் வேலையை காட்டிவிட்டாய்கடைகளால் மறைத்ததுதான் உன் கோபமா?ஆலவாய் அண்ணலின் ஆலயம் பற்றிஅகிலமே பேச துவங்கியதால்பொறுக்காமல் பொசுக்கி விட்டாயா?அனலே... தீயே ... அக்னி குஞ்சே ...உனக்கொரு விதிவகை இல்லையாஇனியொரு விதி செய்வோம் என்பார்கள்விதிகளை மதிக்கும் மனிதர்கள் எங்கே?கண்டிப்பும், கண்காணிப்பும்,கட்டுப்பாடும், கண் அயர்ந்திடகளவு போகிறது... காணாமல் போகிறது!காண்போம் புது மாடங்களைகாணும் கனவுடனே இருப்போம். - சி. சண்முகசுந்தர பட்டர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்