Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பெண்களால் மேன்மை மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது பொன்னாகும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது பொன்னாகும்

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
12:02

வெள்ளை மனதிற்கு சொந்தக்காரரான தனுசு ராசி அன்பர்களே!  

சூரியன் 3-ம் இடத்திற்கு செல்வதால் நன்மை தருவார். சுக்கிரன் மார்ச்3-ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை அதிகரிக்கும்.  பிப்.27-ல் புதனும் சாதகமான இடத்திற்கு வருகிறார். குருபகவான் பிப்.14ல் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே.  அவரால் பண விரயம் ஆகலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

குடும்பத்தில் சுக்கிரனால் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்,- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். மார்ச்3க்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உறவினர்களிடம் சுமூக நிலை உருவாகும்.  மார்ச் 6,7-ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்ரவரி 18,19,20ல் உறவினர் வகையில் பிரச்னை வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 10,11,12-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். பெண்களின் ஆதரவு வளர்ச்சிக்கு துணை நிற்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதை வரலாம்.  பிப். 21,22,மார்ச்1,2- ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியான பயணம் அடிக்கடி செல்ல நேரிடும்.  பகைவர் தொல்லை,  அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு முதலியன பிப்.26-க்கு பிறகு மறையும். வரவு, -செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். பிப்.13,14,15ல் சிறு தடைகள் வரலாம். பிப்.23,24-ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.  மார்ச்3க்கு பிறகு வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலை உருவாகும்.

அரசு பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.  உங்கள் திறமைக்கு ஏற்ப பொறுப்பு கிடைக்காமல் போகலாம்.  அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆனால் சுக்கிரனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  மார்ச்3,4,5-ல் எதிர்பாராத  நன்மை உண்டா கும்.  பிப்.26க்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.கலைஞர்களுக்கு  புகழ், பாராட்டு கிடைக்கும்.  புதிய ஒப்பந்தம் கையெழுத் தாகும்.  அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அதே நேரம் உங்கள் செல்வாக்கிற்கு குறைவிருக்காது.  

மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்.  சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.  பிப்.26-க்கு பிறகு சிறப்பான பலனை காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.  விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்க பெறுவர்.  ஆனால்,  கடினமாக உழைக்க நேரிடும்.  கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.  வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்

பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். கணவர், குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.  பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். பிப்.16,17-ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிப்.25,26ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். பிப்.26க்கு பிறகு பொன், பொருள் சேரும். திருமணம் கைகூட வாய்ப்புண்டு. சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.  முயற்சித்தால் விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

நல்ல நாள்: பிப். 16, 17, 23, 24, 25, 26,
மார்ச் 3, 4, 5, 6, 7, 10, 11, 12
கவன நாள்: பிப்.27, 28- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:3, 5; நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:

* சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* சதுர்த்தியன்று விநாயகருக்கு  அர்ச்சனை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar