Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமலை கந்தவேலர் கோவில் ... திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருப்பு திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
01:02

திருப்பூர் :ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் சிறப்பான மதிப்பெண் பெற ேவண்டி, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு யாகம் நடந்தது.திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், கடந்த, மூன்று ஆண்டுகளாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நினைவாற்றலும், தன்னம்பிக்கையும், வெற்றியும் வழங்க வேண்டி, ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவருக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வரும் பொதுத்தேர்வில் பங்கேற்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹயக்கிரீவர் வழிபாடு துவங்கியது. நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடு நடந்தது.

சிறப்பு யாகம், திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனமும், சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில், பங்ேகற்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களின், பெயர் மற்றும் நட்சத்திர பெயரில் அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. மாணவர்களுடன், பெற்றோர்களும் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். அனைத்து மாணவர்களுக்கும், ஸ்ரீஹயக்கிரீவர் திருவுருவப்படம் மற்றும் வழிபாட்டு மந்திரம் அச்சிடப்பட்ட அட்டை, திருமஞ்சன பொடி, குங்குமம், அர்ச்சனை மலர் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், பேனா, பென்சில், ரப்பர், ஷார்ப்னர், ஸ்கேல் வைக்கப்பட்ட பென்சில் பாக்ஸ், யாகத்தில் வைத்தும், வழிபாடு செய்யப்பட்ட, கையில் கட்டும் ரக்ஷை, இவையனைத்தும், தினமலர் பட்டம் பையில் வைத்து மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. வரும், 18ம் தேதி, பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும், 25ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும், பெற்றோரும் வழிபாட்டில் பங்கேற்று பயனடைய வேண்டுமென, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar