பதிவு செய்த நாள்
15
பிப்
2018
12:02
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோவில்களில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் இரவு முழுக்க கண்விழித்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தனர். ஆன்மிக விழாக்களில் மிக பிரசித்தி வாய்ந்த மகா சிவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு முழுக்க பக்தர்கள் கண் விழித்து விரதமிருந்து வழிபட்டனர். பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் நான்கு கால சிறப்பு பூஜை, அபிேஷக ஆராதனைகள் நடந்தன.
கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ஏகாதச ருத்ர ஹாேமம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு அன்னதானமும், நான்கு கால அபிேஷக வழிபாடும் நடந்தது. காலை, 5:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையோடு வழிபாடு விழா நிறைவு பெற்றது. குள்ளக்காபாளையம் பெரிய ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரி விழாவில்,
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு சக்தி அழைத்தல், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு, 8:00 மணிக்கு அன்னதானம், 9:00 மணிக்கு கால பூஜை நடந்தது. இன்று மதியம், 12:00 மணிக்கு அமாவாசை பூஜை, அன்னதானத்துடன் விழா நிறைவடையும். இதே போல், பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த அம்மன் மற்றும் சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் நேற்று முன் தினம் மாலை, 6:00 மணிக்கு, 16 வகையான அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. கோவிலில் இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து சிவனை வழிபட்டனர். பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். அதிகாலை, 4:00 மணிக்கு சிவனுக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், சிவராத்திரி விழாவில், நேற்று முன் தினம் காலை, 7:00 மணிக்கு பால் பூஜையும், அலங்கார பூஜையை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு செண்டாமரம் கொண்டு வந்து ஸ்தாபனம் செய்யப்பட்டது.மாலையில், பால் பூஜையும், அலங்கார பூஜையை தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு மாமாங்கம் ஆற்றுக்கு சென்று, இரவு, 11:00 மணிக்கு ஆற்றில் இருந்து சக்திவேல், சக்தி கரகத்தோடு சுவாமி திருவீதி உலாவாக வந்து கோவிலை அடைந்தது. நேற்று, மதியம், 12:00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் சிவராத்திரி திருவிழா நிறைவு பெற்றது.