பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டத்தில் பழமையான ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் இரவு, சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவில், சிவனுக்கு பால், தயிர், பஞ்சமிர்தம், தேன், மஞ்சள், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.