பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
குளித்தலை: மேட்டுமருதூர் அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில், எரிகாவல் பூஜை நடந்தது. இதில், அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து, முக்கிய வீதி வழியாக சுவாமி ஊர்வலம் மயானம் சென்று, அங்கு எரிகாவல் பூஜை நடந்தது. இரவு ராணிமங்கம்மாள் சாலை நான்கு ரோட்டில், கோட்டை கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் குடிபாட்டுக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். கோவில் திருத்தேர் வலம் இன்று நடக்கிறது. இதில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து, கோவில் குடிபாட்டுக்காரர்கள் மற்றும் குளித்தலை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொள்வர்.
* குளித்தலை அடுத்த, மருதூர் பஞ்., மேட்டு மருதூர் ஆரா அமுதீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை யொட்டி சுவாமிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. இதில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.