பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
ப.வேலூர்: ப.வேலூர் அருகே உள்ள, திருப்பதி முனியப்ப சுவாமி கோவிலில் நேற்று அசைவ திருவிழா நடந்தது. ப.வேலூர் அடுத்த பிலிக்கல்பாளையம் அருகே, சேளூர் சாணார்பாளையத்தில் திருப்பதி முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. 60 அடி உயரமுள்ள முனியப்ப சுவாமி கையில், ஒன்றரை டன் எடையுள்ள, 25 அடி நீள கத்தியை கையில் ஏந்தியவாறு, பிரமாண்டமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாசி மாத திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. காலை, 7:00 மணியளவில் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தனர். மதியம், 2:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு, 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடநதது. அன்றிரவு, 9:00 மணியில் இருந்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 205 கிடாக்கள் வெட்டப்பட்டன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. ப.வேலூர், பிலிக்கல்பாளையம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை மறு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.