ஈரோடு: சரஸ்வதி ஹயக்ரீவர் மஹா யாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பொதுதேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும், கல்லூரி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டியும், ஈரோடு காரைவாய்க்கால் ராத்திரி சத்திரம் ராகவேந்திரர் கோவிலில், சரஸ்வதி ஹயக்ரீவர் மஹா யாகம், நேற்று நடந்தது. ஈரோடு மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வேள்வியில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்ட, 500 மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட பேனா வழங்கப்பட்டது.