Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... சிவகங்கையில் 9 ம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு, ’நோட்டீஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
01:02

மதுரை: ’மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு, ’நோட்டீஸ்’ அனுப்பி, மேல் நடவடிக்கை குறித்து, மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவில், ’மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், பாதுகாப்பை பலப்படுத்த, 2009ல் மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால், மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை.கோவிலில், பிப்., 2ல் தீ விபத்து ஏற்பட்டது.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தவறிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், ’மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. அலைபேசிகளை சேகரித்து, பாதுகாத்து வைக்க, தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என, 9ம் தேதி உத்தரவிட்டனர்.நேற்று இந்த வழக்கை, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர்: நீதிமன்ற உத்தரவுப்படி, அலைபேசிக்கு தடை விதிக்க, கோவில் நிர்வாகம் தவறி விட்டது. தீத்தடுப்பு கருவிகளை நிறுவவில்லை. ஊழியர்களுக்கு தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை பயிற்சி அளிக்கவில்லை.அரசு வழக்கறிஞர்:அலைபேசிகளுக்கு தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலைபேசிகளை பாதுகாத்து, ஒப்படைக்கும் ஏற்பாடுகள், இரண்டு வாரங்களில் முடியும்.மனுதாரர் வழக்கறிஞர்: கோவிலைச் சுற்றிலும், விதிமீறல் கட்டடங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய, உயர் நீதிமன்றம், 2014ல் வழக்கறிஞர் கமிஷனர் குழுவை அமைத்தது.ஆய்வில், 547 விதிமீறல் கட்டடங்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தது. சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு, இதுவரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பவில்லை. எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நீதிபதிகள்:அலைபேசிகளை பாதுகாக்கும் அறைகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதி நவீன தீத்தடுப்பு கருவிகளை நிறுவ வேண்டும்.கோவில் சுற்றுச் சுவரில் இருந்து, 1 கி.மீ., சுற்றளவில், 9 மீ., உயரத்திற்கு மேல், கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு, மாநகராட்சி உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது பற்றி மாநகராட்சி கமிஷனர், இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar