பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
அவிநாசி: திருப்பூர் அருகே பிரசித்தி பெற்ற திருமுருகநாதசுவாமி கோவிலில் மாசி மாத தேர்த்திருவிழா, நாளை இரவு, கிராமசாந்தியுடன் துவங்குகிறது. வரும், 23ல் கொடியேற்றம், 24ல் சூரிய சந்திர மண்டல காட்சிகள், 25ல் பூத வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 26ல், புஷ்ப விமான காட்சி ஆகியன நடக்கிறது. திருவிழாவில், 27ம் தேதி, பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சியும், 28ல் திருக்கல்யாணம், யானை, அன்ன வாகன காட்சிகள் நடக்கிறது. மார்ச், 1ம் தேதி, அதிகாலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை தேரோட்டமும் நடக்கிறது. 2ம் தேதி மீண்டும், தேரோட்டம், 3ல் பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சிகள், தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. ஸ்ரீ சுந்தரர் வேடுபறி திருவிழா, 4, 5ம் தேதி, தரிசன காட்சி, 6ம் தேதி, மஞ்சள் நீர், மயில் வாகன காட்சி ஆகியன நடக்கிறது.