பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், புது மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 15ல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும், மூலவருக்கு, சிறப்பு அபி?ஷகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று, சிறப்பு வஸ்திர அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். வரும், 25ல், திருவிளக்கு பூஜை, 26ல் தீர்த்தம் எடுத்தல், வாணியம்மனுக்கு வேல் எடுத்தல் நிகழ்ச்சி, 27ல் பொங்கல் வைபவம், மாவிளக்கு, திரிசங்கு பூஜை, மஹா அபி?ஷகம், மஹா அலங்காரம் நடக்கிறது. வரும், 28ல் அதிகாலை தீ மிதி விழா நடக்கிறது. மார்ச், 1ல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழா, இரவில் தெப்பத்தேர் உற்சவம், வாணவேடிக்கை நடக்கிறது.