பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
கரூர்: கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில் குண்டம் திருவிழா விமரிசையாக நடந்தது. கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சியம்மன் கோவிலில், 95வது குண்டம் திருவிழா கடந்த, 19ல் துவங்கியது. அம்மனுக்கு நாள்தோறும், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை, குண்டம் திருவிழா நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று காலை, 11:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், மாலையில் கரகம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.