பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
உளுந்துார்பேட்டை : துலங்கம்பட்டு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோவில் ரதோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். உளுந்துார்பேட்டை தாலுகா, துலங்கம்பட்டு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மகோற்சவ விழா, கடந்த 13 ம் தேதி துவங்கியது. அன்று காலை சந்தன காப்பு அலங்காரமும், இரவு சுவாமி உற்சவமும் நடந்தது. மறுநாள் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா, 15ம் தேதி இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா, 16ம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா, 17ம் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா, 18ம் தேதி அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மயானகொள்ளை திருவிழாவும், இரவு அரசமங்கலம் அருள்வாக்கு அம்மாவுடன் சக்தி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 10;30 மணிக்கு அம்மன் கஞ்சுனி கபாலத்துடன் அழைத்து கொண்டு ஸ்ரீஅங்காளம்மன் கோவிலை வந்தடைதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12:30 மணிக்கு ரதோற்சவம் தீபாரதனையுடன் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில், தினகரன் அணி தெற்கு மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, துலங்கம்பட்டு மற்றும் பல்வேறு கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.