மாசித் திருவிழா: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2018 09:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெ ற்றுவருகிறது. மாசிப் பெருந்திருவிழாவையொட்டி அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 2 ம்தேதி 5 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். அன்று இரவு அம்மன் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மார்ச் 6 ல் தெப்ப உற்ஸவம் நடைபெறுகிறது. மண்டகப்படி நாட்களில் அம்மன் தசாவதாரம், பூச்சொரிதல், பூ அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். திருவிழா மார்ச் 6 ம் தேதி தெப்ப உற்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.