பதிவு செய்த நாள்
24
பிப்
2018
12:02
திருப்பூர்:கீரனூர், செல்வநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் (பிப். 25) நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் கீரனூரில், ஆயிரம் ஆண்டு பழமையானதும், பிரசித்தி பெற்றது மான, செல்வநாயகி அம்மன் கோவில் உள்ளது. கீரனூர் காணியாளர்கள், கொங்கு வேளாளர் மரபில், ஆதி, அந்துவான், காடை, விளையன், தேவேந்திரன், கீரை ஆகிய ஆறு குலத்தை சேர்ந்த மக்களுக்கு குல தெய்வமாகும்.
இந்த கோவிலில், சிற்ப வேலைப்பாடுகளுடன், கற்கோவில், ராஜகோபுரம் என, ஆறு குலத் தோரால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள, செல்வநாயகி அம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம் (பிப். 25) நடக்கிறது.
கடந்த, 19ல், மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. (பிப். 24), காலை நான்காம் கால யாக பூஜையும், மாலை, ஐந்தாம் கால யாக பூஜையும் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு, ஸ்ரீ செல்வநாயகி அம்மன் யந்திரம், திருவுருவ விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
(பிப். 25), அதிகாலை, 2:30 மணிக்கு திருமுறை விண்ணப்பம், ஆறாம் கால யாக பூஜை, கலசங் கள் புறப்பாடு நடக்கிறது. 6:45 மணிக்கு, மூலவர் கோபுரம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்க ளின் கோபுரங்களுக்கு, ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கோபுரங்கள் மீது, ஹெலி காப்டரில் பூ தூவப்படுகிறது.
காலை, 7:15 மணிக்கு, செல்வநாயகி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை, மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி, 19ம் தேதி முதலே, அன்னதானம் நடந்து வருகிறது.