பதிவு செய்த நாள்
24
பிப்
2018
12:02
சென்னை : உலக நன்மைக்காகவும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாணவ - மாணவியர் தேர்ச்சி பெறவும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஹோமங்கள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு பிராமணர் சங்கம், கொட்டிவாக்கம் கிளை சார்பில், ஆண்டுதோறும், மாணவ - மாண வியர் பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும், உலக நன்மைக் காகவும் சிறப்பு ஹோமங்கள்நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, பிப்., 25ம் தேதி, சென்னை, திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில் உள்ள, சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
காலை, 8:00 மணி முதல், 11:30 மணி வரை ஹயக்ரீவ, சுதர்ஷன, மேதா தட்சிணாமூர்த்தி, அம் ருத மிருத்யுஞ்சய, மூல மந்திரஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
இதில், அனைத்து பள்ளி, மாணவ - மாணவியர், பெற்றோர் பங்கேற்கலாம். சங்கல்பம் செய்துக் கொள்வதற்கு மட்டும், 150 ரூபாய் கட்டணம்வசூலிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், நாரா யணன், மாநில மூத்த பொதுச் செயலர், ஜெகந்நாதன், ஜெயவர்தன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.